என்பது கல்வி தொடர்பானது அல்லது அறிவுத்துறை என்று பொருள்படக்கூடியது. எனவே ஆயும்வேதம் என்பது நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்ற பொருள் தருவது. நீண்டகால வரலாறு கொண்ட இம் மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. சுசுருத்த சங்கிதை, சரக சங்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுள்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.
மேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது
taken from wikipedia





0 comments:
Post a Comment