Friday, November 19, 2010 By: தென்றல் காற்று

காதலி(யி)ன் வலி(ரி)கள்




கல்லுரிக்காதால் கதையானது 
கண்ணீரில் காதல் சரித்திரமானது
என் ஊருக்கு நானோ தரித்திரம் ஆனேன்
நீ மட்டும் ஏன் என் இதயத்தில் சித்திரம் ஆனாய்
மரக்கமுடியவில்லை உன்னை
நான் உன்னை மட்டுமே காதலித்தேன் அதுதான் உண்மை

உன்னுடன் நடந்த கடல்கரை மணலில்
உனதும் எனதும் பெயரை எலுதிய மரங்களில்
நான் உனக்காக எலுதிய கடிதங்களில்
எந்த மாற்றமும் இல்லை
நீ மட்டும் ஏன் மாறிவிட்டாய்
உன் இதயத்தில் மட்டும் ஏன் இந்த மாற்றம்‌

உனக்காக நான் ஏறிய பேருந்துகள்
உனக்காக எனது இதயத்தை எலுத்தாக்கிய பேனாக்கள்
எலியின் பசிக்கு இரையாகிய நான் உனக்கு எலுதிய மடல்கள்
எல்லாவற்றையும் கேட்டுப்பார்
நான் உன்மேல் கொண்ட
காதல் நட்பு எல்லாவற்றையும் கூறும்
காதலில் எலுதிய கடிதங்கள் என் கண்ணீரில் மலர்கின்றன
உலகை மறந்து குழந்தைபோல் திரிந்தேன் உன்னால்
இப்போதும் உலகை மறந்தேன்
ஆனால் கிறுக்கன் போல் அலைகிறேன் அதுவும் உன்னால்தான்

என் காதல் எப்போது உனக்கு புரியும் அப்போது வா
அப்போதும் உனக்காக ஏதாவது
கிறுக்கிக்கொண்டே இருப்பேன்
                           தென்றல் காற்றுடன் உங்களைதீண்ட என்றும் உங்கள்
                                                         யோ.பவனீதரன்

2 comments:

ம.தி.சுதா said...

அருமை... நல்லாயிருக்கு....

ம.தி.சுதா said...

////என் காதல் எப்போது உனக்கு புரியும் அப்போது வா
அப்போதும் உனக்காக ஏதாவது
கிறுக்கிக்கொண்டே இருப்பேன் ////
மிகவும் அழுத்தமான வரிகள்... எல்லாம வெற்றியாகட்டும் வாழ்த்துக்கள்...

Post a Comment