Monday, December 14, 2015 0 comments By: தென்றல் காற்று

புகை நமக்குப் பகை

பேதையா இருந்த மனிதன் என்றைக்கு போதை என்னும் ஒன்றைக் கண்டுபிடித்தானோ அன்றுதொட்டு அவன் அதற்கு அடிமையாகவே வாழ்ந்து வருகிறான். போதையைப் பல வகைகளிலும் பெற்றுக் கொள்ளும் வழிகளைக் கண்டுபிடித்துள்ளான் மனிதன். உலகில் உள்ள அனைத்து போதைப் பொருட்களிலும், போதை பெறும் வழிகளிலும் கொடுமையானது புகைப்பிடிப்பதே. ஏன் என்றால் மதுபானமும் இதர போதை வஸ்துக்களும் அதனைப் பயன்படுத்துபவனையும், உட்கொள்பவனையும் ஆட்கொண்டு அழிக்கின்றன. ஆனால் புகைப் பிடிப்பது, அதனைப் பயன்படுத்துபவனை மட்டுமல்லாது அப்புகையை சுவாசிக்கும் அனைவரையும் தாக்குகின்றது. பல ஆய்வுகளில், புகைப்பிடிப்பவர்களைவிட அப்புகையை சுவாசிப்பவர்களே (Passive smokers)  அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். எண்ணிப்பாருங்கள் சகோதரர்களே நாம் செய்யும் தவறு மற்றவர்களையும் பாதிக்கவேண்டுமா?. நாம் புகைப்பிடிப்பதற்காகச் செலவுசெய்யும் பணத்தை வைத்துப் படிக்க ஆசை இருந்தும் இன்று வரை பள்ளியையே கண்டிராத பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம். புகையற்ற தேசமும் உண்டாகும். எத்தனை சிறார்கள் சுவாசப் புற்றுநோயால் இறக்கின்றனர் அவர்கள் புகைப்பிடிப்பவர்களா? இல்லை, நாம் செய்த தவறுக்குத் தண்டனை அனுபவிப்பவர்கள். எண்ணிப் பாருங்கள் நண்பர்களே. புகை நமக்கு மட்டும் பகையல்ல அனைவருக்கும் பகை.
                                          நன்றி
   தென்றல் காற்றுடன் உங்களைத்தீண்ட என்றும் உங்கள்  பவநீதரன்.
Sunday, December 13, 2015 0 comments By: தென்றல் காற்று

பிச்சை

என்று ஒரு மனிதன் தனது சொந்த முயற்சியால் தனது தேவைகளைப்பூர்த்தி செய்ய முடியவில்லையோ அன்றே  இரப்பது ஆரம்பமாகின்றது. தனது முயற்சியால் தனது தேவைகளைப்பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்படப்பல காரணங்கள் உள்ளன. அவை, ஊனமுற்ற நிலை, வேலை இல்லாத் திண்டாட்டம், இவற்றைவிடப் பெரிய காரணம், சோம்பேறித்தனம், இன்றும் ஈழத்தில், பேருந்துகளிலும் கோவில்களிலும் பலர், பிச்சை கேட்டு அமர்ந்திருப்பது கவலைக்கிடமான விடையமே, இலங்கையில் அனைத்து ஊர்களிலும் இருக்கும் ஊனமுற்றோர்களையும் இனங்கண்டு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்வதன்மூலம் ஊனமுற்றோர் பிச்சைப் பாத்திரம் ஏந்துவது குறைக்கப்படும். வேலை வாய்ப்பு  அற்றவர்களுக்குச் சுயதொழில் செய்வதற்கான உதவிகளைச் செய்தால், நாடே வேலை  செய்து உண்கிறது, நான் மட்டும் ஏன் இரந்து உண்ணவேண்டும் என நினைத்துச் சோம்பேறிகளும் திருந்தி உழைத்து உண்பர்.
          நம்ப ஆளுங்க ரோசக்காரங்க......
அரசாங்கமும், பண வசதி படைத்தோரும் இவ் வழிவகைகளைச் செய்வது புதிய, பிச்சைகள் அற்ற இலங்கையை உருவாக்கும். 
      புதிய இலங்கையை உருவாக்குவோம்.

தமிழர் தாயகத்தின் தமிழ் சினிமா

  ஈழத்துக் கலைஞர்களின் இனிய முயற்சியால் இன்றைய காலகட்டத்தில் பல வகைகளிலும், விதங்களிலும் குறும்படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அத்தகைய முயற்சிகளும் பாராட்டத்தக்கன. ஈழக்கலைஞர்களின் முயற்சிகள் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தினாலும். இன்றுவரை ஈழத்தமிழன் இந்தியத் தமிழனின் படங்களைப்பார்ப்பதற்குத் திரையரங்குகளில் , அனுமதிச்சீட்டைப்பெற வரிசையில் நிற்கும் நிலை ஈழத்தமிழன் இன்னமும் குறும்படத்தைத் தயாரிக்கும் நிலையிலேயே இருக்கின்றான் என்பதை வெளிப்படையாகக் காட்டுகின்றது. இந்நிலை மாறவேண்டும், இந்தியச் சினிமாவைப்போலவே ஈழத்து சினிமாவும் வளரவேண்டும். இந்தியத் தமிழன்போல் இலங்கைத்தமிழனும் சினிமா உலகில் போற்றப்படவேண்டும். அனைத்து ஈழக்கலைஞர்களும் குறும்படங்களை விடுத்து முழுநீழக் கதைகளிலும் படங்களிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தித் தங்கள் படைப்புக்களை உலக அரங்குகளில் திரையிட முற்பட்டால் தமிழ்நாட்டின் தமிழ் சினிமாவைப்போல், தமிழர் தாயகத்தின் தமிழ் சினிமாவும் வானோங்கும்.

                                                   நல்வாழ்த்துக்கள்