Thursday, December 2, 2010 0 comments By: தென்றல் காற்று

சட்டம்


சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து
.
சட்டம் (Law) எனும் சொல் அரசியல் மற்றும் நீதியாண்மைத் துறைகள் தொடர்புடைய
கண்ணோட்டத்தில், மக்கள்மற்றும் அவர்களாலான அமைப்புகள் ஆகியவை செய்யவேண்டிய,
செய்யக்கூடாதவை ஆகியவற்றை பரிந்துரைக்கும், நடத்தையை நெறிப்படுத்தும், மற்றும்
இவ்வமைப்புகள் சரிசமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் நெறிமுறைகள் மற்றும்
 இந்நெறிகளைப் பின்பற்றாத மக்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்படவேண்டிய
 தண்டனைகளை வகுக்கும் நெறிகளையும் குறிக்கும்.


                                                        

Friday, November 19, 2010 2 comments By: தென்றல் காற்று

காதலி(யி)ன் வலி(ரி)கள்




கல்லுரிக்காதால் கதையானது 
கண்ணீரில் காதல் சரித்திரமானது
என் ஊருக்கு நானோ தரித்திரம் ஆனேன்
நீ மட்டும் ஏன் என் இதயத்தில் சித்திரம் ஆனாய்
மரக்கமுடியவில்லை உன்னை
நான் உன்னை மட்டுமே காதலித்தேன் அதுதான் உண்மை

உன்னுடன் நடந்த கடல்கரை மணலில்
உனதும் எனதும் பெயரை எலுதிய மரங்களில்
நான் உனக்காக எலுதிய கடிதங்களில்
எந்த மாற்றமும் இல்லை
நீ மட்டும் ஏன் மாறிவிட்டாய்
உன் இதயத்தில் மட்டும் ஏன் இந்த மாற்றம்‌

உனக்காக நான் ஏறிய பேருந்துகள்
உனக்காக எனது இதயத்தை எலுத்தாக்கிய பேனாக்கள்
எலியின் பசிக்கு இரையாகிய நான் உனக்கு எலுதிய மடல்கள்
எல்லாவற்றையும் கேட்டுப்பார்
நான் உன்மேல் கொண்ட
காதல் நட்பு எல்லாவற்றையும் கூறும்
காதலில் எலுதிய கடிதங்கள் என் கண்ணீரில் மலர்கின்றன
உலகை மறந்து குழந்தைபோல் திரிந்தேன் உன்னால்
இப்போதும் உலகை மறந்தேன்
ஆனால் கிறுக்கன் போல் அலைகிறேன் அதுவும் உன்னால்தான்

என் காதல் எப்போது உனக்கு புரியும் அப்போது வா
அப்போதும் உனக்காக ஏதாவது
கிறுக்கிக்கொண்டே இருப்பேன்
                           தென்றல் காற்றுடன் உங்களைதீண்ட என்றும் உங்கள்
                                                         யோ.பவனீதரன்
Thursday, November 18, 2010 0 comments By: தென்றல் காற்று

ஆயுள்வேதம்

ஆயுள்வேதம் என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். சமசுக்கிருதத்தில் ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேத
              என்பது கல்வி தொடர்பானது அல்லது அறிவுத்துறை என்று பொருள்படக்கூடியது. எனவே ஆயும்வேதம் என்பது நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்ற பொருள் தருவது. நீண்டகால வரலாறு கொண்ட இம் மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. சுசுருத்த சங்கிதை, சரக சங்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுள்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.
                                                                         
மேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது



                                                                                                    taken from wikipedia
Wednesday, November 17, 2010 1 comments By: தென்றல் காற்று

நமீதாவின் ரசிகர்களுக்கு

நமிதா (பி. மே 10, 1981), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நமிதா (Namitha) 1981 ஆம் வருடம் மே மாதம் 10ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தார். அவரின் முழுப்பெயர் நமிதா கபூர். நமிதா 2001ஆம் ஆண்டு மிஸ்.இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெட்லி, மூன்றாம் இடம் பெற்றவர் த்ரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்றஆங்கில படத்திலும் நமிதா நடித்துள்ளார். நமிதாவிற்கு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் விளையாட பிடிக்கும். அவர் சிறிது காலம் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். வெள்ளை ரோஜா அவரின் விருப்பமான மலர்
                                                                                                     taken from wikipedia
Wednesday, November 3, 2010 0 comments By: தென்றல் காற்று

ஆழிக்குமரன் ஆனந்தன்

ஆழிக்குமரன் ஆனந்தன் (வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்[மேற்கோள் தேவை].
பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்[மேற்கோள் தேவை]. ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.
இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை.
                                                                                         taken from wikipedia
Friday, October 29, 2010 0 comments By: தென்றல் காற்று

உங்களுக்குத் தெரியுமா?


Inverted Jenny.jpg

நீர் தூய்மையாக்கம்

நீர் தூய்மையாக்கம் (Water purification) என்பது, நீரில் உள்ள மாசுக்களை அகற்றி, மனிதர்களின் குடிநீர்த் தேவைக்குப் பொருத்தமான அளவுக்கு அதனைத் தூய்மை ஆக்குவதையோ அல்லது தொழில் துறைத் தேவைகளுக்கு ஏற்ப அவற்றைத் தூய்மைப் படுத்துவதையோ குறிக்கும். நீரிலிருந்து அகற்றப்படவேண்டிய மாசுக்கள், ஒட்டுண்ணிகள், பக்டீரியாக்கள், அல்காக்கள், வைரசுகள், பங்கசுக்கள், கனிமங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. இவற்றுட் சில உடல் நலத்துக்குக் கெடுதி விளைவிக்கக் கூடியவை. வேறு சில, சுவை, மணம், தோற்றம் போன்ற அம்சங்களில் நீரின் தரத்தைக் கூட்டுவதற்காக அகற்றப்படுகின்றன. தூய்மையாக்கத்தின் இறுதியில், சிறிதளவு தொற்று நீக்கி சேர்க்கப்படுவது வழக்கம். நீர் வழங்கல் வலையமைப்புக்களில் அது மீண்டும் மாசடையாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
                                                                                                taken from wikipedia
Monday, October 25, 2010 1 comments By: தென்றல் காற்று

கடி ஜோக்ஸ்

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.


T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?


மா தவம் செஞ்சா இறைவனை அடையலாம்.
மாதவனாக முடியுமா?


வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?


என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.


என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.


பால் கொட்டினா வேற பால் வாங்கிக்கலாம்.
அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கிக்கலாம்.
ஆனால்!
ஆனால்!!
தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது


வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?


என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.


இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

ஆயுள் எதிர்பார்ப்பு




2005 ஆண்டுக்கான, உலகளாவிய மனிதர்களின் வாழ்நாள் எதிர்பார்ப்பு
ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு மனிதரின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்ற எதிர்பார்ப்பை குறிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதர் வசிக்கும் இடத்தை அல்லது நாட்டை முன்வைத்தும், ஆணா பெண்ணா என்ற வேறுபாட்டை முன்வைத்தும் இந்த அளவீடு மதிப்பீடு செய்யப்படுகின்றது. மனிதர்களின் சராசரி வாழ்நாள் (ஆயுள்) எதிர்பார்ப்பு சுவாசிலாந்தில் 32.6 இருந்து யப்பானில் 81 வரை இருக்கின்றது. பொருளாதார வளர்ச்சியில் சிறப்புற்ற நாடுகளில் வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதை இயல்பாக அவதானிக்க முடியும்.

ஜோக்ஸ்

மனைவி: ஏன் இன்னிக்கு அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்துட்டீங்க?

கணவன்: இன்னிக்கு என் அலுவலகத்தில் ஒரு தவறு பண்ணிட்டேன். என் மேலாளர் "நரகத்திற்கு போய்த்தொலை" என்றார். அதனால்தான்???





என்ன சார் இது..? இந்த பத்திரிக்கை விலை இப்படி ஏறிக்கிட்டே போகுதே..?

நீங்கதான் எதுவும் வாங்கறது இல்லையே..? அப்புறம் ஏன் கவலைப்படறீங்க..?

அடுத்த வீட்டுக்காரன் ஒரு கஞ்சப் பயல்.. பொசுக்குன்னு எல்லா பத்திரிகையையும் நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்  





ஒரே குழப்பமா இருக்குடி..

எதுக்கு..?

குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுகிட்டா 500 ரூபாயாம்.. கர்ப்பிணி உதவித் தொகை 5000 ரூபாயாம்.. ரெண்டையும் எப்படி வாங்குறதுன்னுதான்..!
 

சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்குப் பின் திரும்பியது ஜப்பானிய விண்கலம்

பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ஜப்பானிய “ஹயபுசா’ விண்கலம் ஏழாண்டுகளுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளது.
http://img.dinamalar.com/data/large/large_19226.jpgபூமியிலிருந்து 30 கோடி கிலோமீட்டர் தூரத்தில் “இட்டோகவா’ என்ற சிறிய கிரகம் உள்ளது. இந்த கிரகத்தை பற்றி ஆராய்ச்சி செய்ய “ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சி’ கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் “ஹயபுசா” என்ற விண்கலத்தை அனுப்பியது. இட்டோகவா கிரகத்தில் உள்ள மண்ணையும் கல்லையும் கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் தோன்றிய விதத்தை கண்டறிய முடியும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் நம்பினர். இட்டோகவா கிரகத்திலிருந்து மண்ணையும், கல்லையும் சேகரித்துக் கொண்டு ஹயபுசா விண்கலம் நேற்று முன்தினம் பூமிக்கு திரும்பியது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரத்தருகே உள்ள ஊமரா என்ற இடத்தில் தரையிறங்கிய ஹயபுசா விண்கலம், இட்டோகவா கிரகத்திலிருந்து 18 கிலோ மண்ணை உலோக உரைக்குள் (கேப்சூல்) பாதுகாப்பாக வைத்து எடுத்து வந்துள்ளது. பல்வேறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹயபுசா விண்கலம் மூன்று ஆண்டு காலம் தாமதமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. ஹயபுசா கொண்டு வந்துள்ள இட்டோகவா கிரக மண் மாதிரி மூலம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் சில உண்மைகள் தெரிய வரும் என ஜப்பானிய, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காதலா? நட்பா?

காலங்கள் சென்றால் காதல்கள் மாறலாம்
களங்கங்கள் வந்தாலும் நட்பு மாறாது
முதலில் நண்பர்களாகவே இருப்போம்  காலங்கள் தாண்டி
களங்கங்களை உடைத்து காதலும் நட்பும் கலந்த
ஒரு புதிய உறவு  படைப்போம்
Saturday, October 9, 2010 0 comments By: தென்றல் காற்று

அழகியே

நான் உன்போல் ஒரு அழகியைப் பார்த்ததில்லை 
என்று சொல்லமாட்டேன் பார்த்திருக்கலாம்
அனால் இனிமேல் உன்னை விட ஒரு அழகியை
காணமுடியாது