Monday, November 7, 2011 1 comments By: தென்றல் காற்று

மூன்றாவது தவறு

போர்ட் ரோயலில் தளபதி தனது படை வீரர்களுக்கிடையில் செல்வது
படமாக்கப்பட்டுள்ளது. முதலில் "ரைட் அபௌட் பேஸ்" என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது அப்போது தளபதியின் இடது பக்கத்தில் இருக்கும் படை வீரரின் பை மறைந்திருப்பதையும் அடுத்ததாக,  "ப்ரெசென்ட் ஆர்ம்ஸ்" என்ற கட்டளைகொடுக்கப்படுகிறது (இரண்டாவது படத்தில்) அப்போது அந்த பையை நன்றாக பார்க்கக்கூடியதாய்  இருப்பதையும் காண்கிறீர்கள்.
(நன்றாக கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் (தளபதியின் பின்னால் இருக்கும் வீரர்கள் யாரும் அசைவதாய் அந்த கட்டத்தில்  காண்பிக்கவில்லை))
                                                                                                                                                                                                                                                                                                 தொடரும் .............
Sunday, November 6, 2011 0 comments By: தென்றல் காற்று

இரண்டாவது தவறு

இரண்டாவது தவறு  
                   அதே படத்தில் ஜாக்,  போர்ட் ராயல் என்னும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது தூக்கிலிடப்பட்டு இருக்கும் எலும்புக்கூடுகளுக்கு வணக்கம் தெரிவிக்கிறான்  அந்தக்காட்சி தூரத்தில் இரண்டுமுறையும்  அருகிலும் படமாக்கப்பட்டுள்ளது. தூரத்தில் இருக்கும் போது எலும்புக்கூட்டில் இருந்த   துணியை விட அருகில் காட்டப்பட்டுள்ள காட்சியில் அதிகமாக உள்ளது. அதிலும் நடுவில் இருக்கும் எலும்புக்கூட்டின் தலையின் நிலையில்  மாற்றம் உள்ளது.   

                                                                                                                                                                    தொடரும்.................

பைரேட்ஸ் ஆப் தி கரிப்பியன் படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுகள்


முதலாவது தவறு 

படப்பிடிப்பின் போது தவறுதலாக படப்பிடிப்பு குழுவினரில் ஒருவர் வெள்ளை நிற தொப்பியும் வெள்ளை நிற ஆடையும் அணிந்து   கொண்டு  பின்னால் நிற்பதும் படமாக்கப்பட்டுள்ளது. 

 அனைவராலும் (சிறு குழந்தை முதல் பெரியோர் வரை)ரசிக்கப்பட்ட படம் (பைரேட்ஸ் ஆப் தி கரிப்பியன்) இதுவரை மூன்றிற்கு  மேற்பட்ட  பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்பொழுது தான்  சிறிய  பிழைகளை நான் கண்டுபிடித்து உள்ளேன் உங்களின் அநேகமானவர்களுக்கு இது தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இது பற்றி தெரியாதவர்களுக்கு இது விருந்தாகட்டும்.  
                                                                     நன்றி
Wednesday, January 19, 2011 0 comments By: தென்றல் காற்று

அன்பு

                  
தாயில் சேய் கொள்ளும் அன்பு 
சேயில் தாய் கொள்ளும் அன்பு 
உயிர் உள்ளவரை உறவுகளின் மீதினில் 
உறவுகள் கொள்ளும் அன்பு 
பூக்கள் மீது தென்றல் கொள்ளும் அன்பு
கரை மீது அலை கொள்ளும் அன்பு 
உலகிலே கோடி கோடி அன்பு எதுவாயினும் 
ஜென்மங்களிலும் விலகமுடியாத என்றும்
மாறாத உன்னில் நான் கொண்ட அன்பு - அது
அன்பு அல்ல ஆருயிரே -என்
ஜீவன் கொண்ட காதல் என்னும் பொக்கிஷம் 
                   தென்றல் காற்றுடன் உங்களை தீண்ட என்றும் உங்கள்
                                                       யோ. பவநீதரன் 
Tuesday, January 18, 2011 0 comments By: தென்றல் காற்று

நினைவுகள்

உன்னுடன் பழகிய நாட்கள்
சிரிதுப்பேசிய நாட்கள்
இன்றுவரை என் நனைவில் வாழும்
 உன் சிரித்த முகம்
நீ எனக்கு அழைப்பு விடுத்த தொலைபேசியின் ஒலி
எதுவும் சொல்லவில்லை ஒரு  வார்த்தையில்
 நீ என்னை பிரிவாய் என்று
எதிர் பார்ப்புக்கள் நிறைந்த இந்த உலகில் உன்
 வருகைக்காய் மட்டும் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்
தென்றல் உள்ளவரை என் மூச்சு உள்ளவரை
என்றும் உன் நினைவில் நான்
                       தென்றல் காற்றுடன் உங்களை தீண்ட என்றும் உங்கள்
                                                                  யோ.பவநீதரன்
Saturday, January 15, 2011 1 comments By: தென்றல் காற்று

புன்னகை

மெதுவாக உன் கைகளை தழுவி
அலை வந்து முகம் காட்டும் கடல் கரையில்
கனவுகளின் மோதல்கள் நெஞ்சைதாக்க
இப்போதுதான் நடை பழகும் குழந்தை போல
உன்னுடன் நடந்தேன் கவலைகள் மறந்தேன்
தென்றல் வந்து முகம் துடைக்க
என் கண்கள் மெல்ல உனைப்பார்க்க
நீ புன்னகையால் என்னை தாக்கினாய்
அன்று தெரியவில்லை
அது தான் நீ எனக்கு வைத்தஆப்பு என்று!
                    தென்றல் காற்றுடன் உங்களை தீண்ட என்றும் உங்கள்
                                                                    யோ.பவநீதரன்