பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ஜப்பானிய “ஹயபுசா’ விண்கலம் ஏழாண்டுகளுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரத்தருகே உள்ள ஊமரா என்ற இடத்தில் தரையிறங்கிய ஹயபுசா விண்கலம், இட்டோகவா கிரகத்திலிருந்து 18 கிலோ மண்ணை உலோக உரைக்குள் (கேப்சூல்) பாதுகாப்பாக வைத்து எடுத்து வந்துள்ளது. பல்வேறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹயபுசா விண்கலம் மூன்று ஆண்டு காலம் தாமதமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. ஹயபுசா கொண்டு வந்துள்ள இட்டோகவா கிரக மண் மாதிரி மூலம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் சில உண்மைகள் தெரிய வரும் என ஜப்பானிய, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment