Saturday, January 15, 2011 By: தென்றல் காற்று

புன்னகை

மெதுவாக உன் கைகளை தழுவி
அலை வந்து முகம் காட்டும் கடல் கரையில்
கனவுகளின் மோதல்கள் நெஞ்சைதாக்க
இப்போதுதான் நடை பழகும் குழந்தை போல
உன்னுடன் நடந்தேன் கவலைகள் மறந்தேன்
தென்றல் வந்து முகம் துடைக்க
என் கண்கள் மெல்ல உனைப்பார்க்க
நீ புன்னகையால் என்னை தாக்கினாய்
அன்று தெரியவில்லை
அது தான் நீ எனக்கு வைத்தஆப்பு என்று!
                    தென்றல் காற்றுடன் உங்களை தீண்ட என்றும் உங்கள்
                                                                    யோ.பவநீதரன்

1 comments:

ம.தி.சுதா said...

அருமையாயுள்ளது வாழ்த்துக்கள்...

Post a Comment