என்று ஒரு மனிதன் தனது சொந்த முயற்சியால் தனது தேவைகளைப்பூர்த்தி செய்ய முடியவில்லையோ அன்றே இரப்பது ஆரம்பமாகின்றது. தனது முயற்சியால் தனது தேவைகளைப்பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்படப்பல காரணங்கள் உள்ளன. அவை, ஊனமுற்ற நிலை, வேலை இல்லாத் திண்டாட்டம், இவற்றைவிடப் பெரிய காரணம், சோம்பேறித்தனம், இன்றும் ஈழத்தில், பேருந்துகளிலும் கோவில்களிலும் பலர், பிச்சை கேட்டு அமர்ந்திருப்பது கவலைக்கிடமான விடையமே, இலங்கையில் அனைத்து ஊர்களிலும் இருக்கும் ஊனமுற்றோர்களையும் இனங்கண்டு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்வதன்மூலம் ஊனமுற்றோர் பிச்சைப் பாத்திரம் ஏந்துவது குறைக்கப்படும். வேலை வாய்ப்பு அற்றவர்களுக்குச் சுயதொழில் செய்வதற்கான உதவிகளைச் செய்தால், நாடே வேலை செய்து உண்கிறது, நான் மட்டும் ஏன் இரந்து உண்ணவேண்டும் என நினைத்துச் சோம்பேறிகளும் திருந்தி உழைத்து உண்பர்.
நம்ப ஆளுங்க ரோசக்காரங்க......
அரசாங்கமும், பண வசதி படைத்தோரும் இவ் வழிவகைகளைச் செய்வது புதிய, பிச்சைகள் அற்ற இலங்கையை உருவாக்கும்.
புதிய இலங்கையை உருவாக்குவோம்.
நம்ப ஆளுங்க ரோசக்காரங்க......
அரசாங்கமும், பண வசதி படைத்தோரும் இவ் வழிவகைகளைச் செய்வது புதிய, பிச்சைகள் அற்ற இலங்கையை உருவாக்கும்.
புதிய இலங்கையை உருவாக்குவோம்.
0 comments:
Post a Comment